வவுனியாவில் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_1507வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில், சிறிசங்கர் (பாபு)அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பாரதியின் பெருமைகளை பறைசாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியதுடன், தமிழ்மணி அகளங்கனின் “செந்தமிழும் நாப்பழக்கம்” எனும் நூலும் வெளியிடப்பட்டது. இவ் நிகழ்வில், வவுனியாவில் கம்பீரமாய் காட்சிதரும் சிலைகளை தமது காலத்தில் நிறுவி, தமிழையையும் சைவத்தையும் காத்த பெரியோர்களின் காவலன்கள் என வன்னியில் அழைக்கப்படும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், உப நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட இணைப்பாளருமான திரு க,சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா சமூகசேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன்,போசகர் ரோய் ஜெயக்குமார், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன், மற்றும் ஊடகவியலாளர்களான அருள், காந்தன் ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

IMG_1507IMG_1473 IMG_1475 IMG_1478 IMG_1479 IMG_1480 IMG_1481 IMG_1482 IMG_1489 IMG_1490 IMG_1501 IMG_1504 IMG_1507 IMG_1513 IMG_1521