நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை பதிவுசெய்ய நடவடிக்கை-
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தல் நிமித்தம் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இந்த கூட்டணியில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி தொகுதிகளை மீள்நிhணயம் செய்வதற்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளநிலையில், அதனை சிறுபான்மை கட்சிகளின் சார்பில் தாமும், அமைச்சர் ரவுப் ஹக்கீமும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைச்சர் மனோகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.