ஏழாலை மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் சந்திப்பு-(படங்கள்)

P1090469யாழ். ஏழாலை கோட்டைக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சைவ வாலிபர் சங்க சனசமூக முன்றலில் அமைந்துள்ள குழந்தைவேல் கலையரங்கத்தில் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப்பகுதி மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று (13.09.2015) இடம்பெற்ற இச்சந்திப்பு அப் பகுதியைச் சேர்ந்த கந்தையா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும், சைவ வாலிபர் சங்க சனசமூக நிலைய நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இச் சந்திப்பின்போது அப்பகுதிப பொதுமக்கள் தமது பிரதேசம் தொடர்பிலான அபிவிருத்தித் தேவைகள் குறித்தும், குறிப்பாக திருத்தப்படாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைப் பிரதேசங்கள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர். இவ் நிகழ்வில் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும் போது, இன்று இவ் வகையான தேவைகள் மாவட்டம் முழுமையாகவும் உள்ளது. பல இடங்களில் வீதி திருத்தம் தொடர்பில் பொதுமக்களது கோரிக்கைகள் உள்ளன. என்னால் இயன்றவரை உங்கள் தேவைகளை கவனத்தில் எடுத்து பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் மாகாண சபை நிதிக்கூடாக நிறைவு செய்ய முயற்சிப்பேன் எனக் குறிப்பிட்டார். இவ் நிகழ்வின்போது யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பொதுமக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிகப்பட்டார்.

P1090469P1090463 P1090465 P1090466 P1090468 P1090470