கோட்டாபய, நாமல் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இருவரும் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். காணி அபிவிருத்தி அதிகார சபைக்கான நிதியை டீ.ஏ ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.