பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்-

ranilஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர்இ குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிஇ வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் முக்கயஸ்தர்களை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது தொழிநுட்பதுறை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மற்றும் இலங்கை விவசாயிகளுக்கான இந்திய சந்தைவாய்ப்பு என்பன குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது அவதானம் செலுத்தப்படும் எனவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.