Header image alt text

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்-

jaffna campusயாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி பின் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.

கிறவுண் மீடியா நெற்வேர்க் செய்தி ஆசிரியர் சுரேந்திரன் சமாதான நீதவானாக நியமனம்-

Surenth JP 01முன்னாள் பிரதி அமைச்சரிடம் இருந்து சமாதான நீதவானாக சுரேந்த் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் அவர்களின் சிபாரிசுக்கமைய பொத்துவில் தமிழ் மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவனும் பேராதெனிய பல்கலைக்கழக வெளிவாரி மாணவனும் CROWN MEDIA NETWORK செய்தி ஆசிரியருமான ச.சுரேந்திரன் (சுரேந்த்) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

அஸாத் சாலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி.பதவி வழங்கக் கோரி பேரணி-

asath saliமத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மீராவோடையில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அஸாத் சாலி சந்தர்ப்பம் கேட்டபோது, தேர்தலில் போட்டியிட வேண்டாம் தேசிப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இருந்தும் அவருக்கு கொடுத்த வாக்குறுதி போல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-

nedunthivu fishயாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பான இன்று (16) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு பகுதி மீனவர்களால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களுக்கான மானியங்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில் 200 மீனவக் குடும்பங்கள் உள்ள போதிலும், 17 குடும்பத்திற்கு மாத்திரமே மானியங்கள் வழங்கப்படுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்பு-

shamaraஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் .இதனையடுத்து நிலவிய மாகாண சபை முதலமைச்சர் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை-

campusசர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்றுகாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் இந்த கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டுள்ளனர்.

வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக புலம்பெயர் உறவுகள் உதவி-(படங்கள்)

20150914_110942யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு 97க்கு மேற்பட்ட இரு கண்களையும் இழந்தோர், இரு கண்களையும் இழந்த இருபதுக்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் அங்கவீனர்கள் என சுமார் 252 பேருக்கு மேலான விழிப்புலன் அற்ற அங்கவீனர்களைக் கொண்ட “வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கம்”; பரந்தன் முல்லை சாலையில் இவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக செயற்பட்டு வருகின்றது. இவ் அமைப்பினால் எமது சங்கத்திடம் இவர்களுக்கான உணவு பொருட்கள் சார்ந்த உதவிகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இன்று உணவுப் பொதிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டன. Read more

அவுஸ்திரேலிய பிரதமராக மல்கம் டேர்ன்புல் பதவியேற்பு-

malcom turnbulஅவுஸ்திரேலிய பிரதமராக மல்கம் டேர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கென்பராவில் ஆளுநர் நாயகம் முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமைத்துவத்தை டொனி அபொட் இழந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் நேற்று அவர் விலகியிருந்தார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவரது அரசின்மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக நாட்டை அவர் முன்னேற்ற தவறிவிட்டதாகக் கூறி, மூத்த அமைச்சர் மல்கம் டேர்ன்புல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, அவர்களுள் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிய உட்கட்சி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டோனி அபாட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும், டேர்ன்புல்லுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, மல்கம் டர்ன்புல், அவுஸ்திரேலியாவின் 29வது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். Read more

ஆணைக்குழு என்று நியமிக்கப்பட்டவைகள் வெறும் கண்துடைப்பே-சுரேஸ்-

sureshஉள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக இன்றுபகல் யாழ். நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் நல்லெண்ண அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதம நீதியரசர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஐநாவில் தெரிவித்துள்ளார். இதில் எந்தவொரு விட்டுக்கொடுப்போ நல்லெண்ணமோ இல்லை. பிரதம நீதியரசர், சேவையிலும் அனுபவத்திலும் மூத்தவராக காணப்படுகின்றார். Read more

தமிழர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்-மோடி வலியுறுத்தல்-

ranil modi metஅரசியலமைப்பொன்றின் மூலம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை ஐநா மனித உரிமைகள் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து இரு நாட்டுப் பிரதமர்களும் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் மேலும் கூறியதாவது, ஜெனிவா மாநாடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். Read more

போராட்டக்கார்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும்அதிகாரி நாடு திரும்பல்-

airportகம்பஹா மாவட்டம் வெலிவேரிய – ரதுபஸ்வலவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் இராணுவ அதிகாரி நாட்டுக்கு வந்துள்ளார். இன்று காலை கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார். மேலும் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் விஷமாகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆணை பிறப்பித்த அதிகாரியை கைதுசெய்யக் கோரி, பூஜித தேரிபெஹெ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட பிக்குகள் தலைமையிலான ஒரு பிரிவினர் விமான நிலையத்திற்கு முன்பான இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தார். Read more