Header image alt text

சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது: ராஜித சேனாரத்ன

rajithaபோர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விசாரணை சரியான முறையில் நடைபெற்றால் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற முடியுமென்று இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகியிருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசிய ராஜித சேனாரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
‘நீதித் துறை சுயேச்சையாக இயங்குகிறது’ Read more

‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐ.நா

unஇலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.
‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’
அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐ.நா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. Read more