Header image alt text

ஈழத் தமிழ் மக்களுக்கு நேற்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற நாள் வடக்கு மாகாண முதலமைச்சர்.

tamilnaduvikiதமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.

நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று கூறியுள்ள அவர் நாம் இதுவரை காலமும் எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைப்பதைபோல அமைந்த நாள் என்று தெரிவித்தார். Read more

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசின் உத்தியோகபூர்வமாக பதில்

sri lanka (4)ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை  கவனத்திற் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரவேற்றுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. Read more

‘ஐ.நா. அறிக்கையை முழுமையாக ஏற்கிறோம்: இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும்’

sumandran MPஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாகவும் அண்மையிலே இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர்களிடமும் இதைத்தான் முழுமையாக வலியுறுத்தியிருந்தோம். எங்களுடைய நிலைப்பாடு இந்த பரிந்துரைகளிலே முழுமையாகத்தென்படுகிறது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமெனவும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்,  பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் Read more