‘ஐ.நா. அறிக்கையை முழுமையாக ஏற்கிறோம்: இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும்’

sumandran MPஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாகவும் அண்மையிலே இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர்களிடமும் இதைத்தான் முழுமையாக வலியுறுத்தியிருந்தோம். எங்களுடைய நிலைப்பாடு இந்த பரிந்துரைகளிலே முழுமையாகத்தென்படுகிறது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமெனவும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்,  பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் இலங்கையிலே இந்த விசாரணை நடைபெறுவதை சில புலம் பெயர் அமைப்புக்கள் விரும்பவில்லை என வினாவிய பொழுது. சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை செய்வதே சரியாக இருக்கும். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் 80 வீதத்தினர் இலங்கையில் தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும். வேறு இடங்களில் சாட்சியங்களை தேடிக்கண்டுபிடிக்கமுடியாது. இங்கே வாழுகின்றவர்களுக்கு நீகிடைக்கவேண்டும் என்றால் இங்கே தான் சாட்சியளிக்கவேண்டும். வெளிநாடுகளில் உள்ள சாட்சியங்களையும் பதிவுசெய்வதற்கான பொறிமுறை செய்யப்படும்.
இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் மற்றும் அமைப்புகள் குழுக்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்களா? எனக் கேட்டதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைத்து தரப்பும் விசாரிக்கப்பட வேண்டும் அது தொடர்பாக விசாரணை செய்பவர்கள் பொறுப்பு கூறுவார்கள் என சுமந்திரன் தெரிவித்தார்.
இவ்வறிக்கையானது மனித உரிமை கவுன்சிலிலே சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவேண்டும். 47நாடுகள் கொண்டசபையிலே விவாதிக்கப்பட்டு நிiவேற்றப்படும் என்ற நம்பிக்கையுள்ளதா? அரசாங்கம் இவ் விசாரணைக்கு மறுக்கின்றதே என வினாவியதற்கு. அரசாங்கம் உத்தியோக பூர்வமாக மறுக்கவில்லை. அரசாங்கம் இதற்கு இணங்கி வரவேண்டும் என்பது எமது இறுதியான நிலைப்பாடு ஜ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவேற்றவேண்டும் அது தொடர்பாக வலியறுத்தியுள்ளோம். இலங்கையோடு இணங்கி ஒரு தீர்மானத்தை செயற்படுத்துகின்ற விதமாகவே அமெரிக்காவின் நிலைபாடு இருக்கிறது. அவ்வாறான நிலைப்பாட்டுக்கு இம்மாத இறுதிக்குள் அரசை கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது சுமந்திரன்.