ஈழத் தமிழ் மக்களுக்கு நேற்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற நாள் வடக்கு மாகாண முதலமைச்சர்.

tamilnaduvikiதமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.

நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று கூறியுள்ள அவர் நாம் இதுவரை காலமும் எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைப்பதைபோல அமைந்த நாள் என்று தெரிவித்தார்.தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் ஈழ மக்களுக்காக முக்கியமான உள்ளடக்கத்துடன் ஏகமனதுடன் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன் ஊடாக ஈழத் தமிழ் மக்களும் தமிழகத் தமிழ் மக்களும் சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தி அதன் ஊடாக நீதியை எதிர்பார்ப்பது ஒரே குரலில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா மனித உரிமை ஆணையக அறிக்கை ஒரு ஆணித்தரமான அறிக்கை என தெரிவித்த அவர் அறிக்கையின் பின்னர் கொண்டுவரப்படும் பிரேரணையே முக்கியத்துவமானது என்றும் குறிப்பிட்டார்.

ஐ.நா அறிக்கையை அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்க அழுத்தம் கொடுப்பதும் முயற்சிகளில் ஈடுபடுவதுமே முககியமானது என்றும் ஐ.நா விசாரணையில் பரிந்துரைக்கப்பட்ட விசாரணையை சாத்தியப்படுத்துவதும் முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.