Posted by plotenewseditor on 18 September 2015
Posted in செய்திகள்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டாலும், அவர் மீதான எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவில்லை என்று நோபல் பரிசு வழங்கும் குழுவின் முன்னாள் செயலர் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தன
ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஒரு ஏற்றம் கிடைக்கும் என தமது குழுவினர் நம்பினர் என்று, அக்குழுவின் முன்னாள் செயலர் கெயிர் லுண்டெஸ்டாட் தமது நினைவலைகளில் கூறியுள்ளார்.
அவருக்கு விருது வழங்கப்பட்டது அமெரிக்காவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்றும், அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் அல்ல எனப் பலர் வாதிட்டனர் என்றும் லுண்டெஸ்டாட் தெரிவித்துள்ளார்.
‘ஒபாமாவுக்கே ஆச்சரியம்’ Read more