ஆப்கானிஸ்தானில் கிழக்கே ஐஎஸ் குழுவினர் பள்ளிக்கூடங்களை மூடியுள்ளனர்

afghan_isisஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமிய அரசு என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் குழுவினர் ஆப்கானிஸ்தானின் கிழக்கே 30 பள்ளிக்கூடங்களை மூடிவிட்டனர் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் கூறுகிறது.
நங்கர்ஹார் என்ற இந்த பாதிக்கப்பட்ட மாகாணத்தில் கல்வி அமைச்சகத்துக்காகப் பேசவல்ல ஒருவர், இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 57ஆக இருக்கும் என்று கூறினார்.சுமார் 30,000 பள்ளி மாணவர்கள் வரை வகுப்புகளுக்குச் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.ஜலாலாபாத் நகரில் இருக்கும் இந்தப் பகுதி ஐ எஸ் அமைப்பின் கோட்டையாக இருக்கிறது.
அவர்கள் அங்கு தாலிபான் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் அங்கு சுமார் 130 பேரை சிறைப் பிடித்தும் வைத்திருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன