18 மாதங்களுக்குள் சில விவகாரங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை – மங்கள சமரவீர

mangala_samaraweeraஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வை அளிப்பது அவசியம் எனவும்
கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து இந்த உள்நாட்டு விசாரணைக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அவர், அதனை நான்கு பிரிவுகளாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களின் ஆலோசணைக்கு ஏற்ப, அரசியல் சாஸனத்திற்கு உட்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் செயற்படுவதற்கான அலுவலகமொன்றை அமைக்கவும் எதிர்பார்த்துள்ளதாக மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
இழப்பீடு தொடர்பான உரிமைக்காக தனி அலுவலகமொன்றை சட்ட ரீதியாக அமைக்க விரும்புவதாகவும் இந்த அலுவலகத்தின் வழியாக, நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல ஆணையங்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவுமிருப்பதாக மங்கள சமரவீர கூறினார்.
இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாதிருப்பதற்கு நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை அளிப்பது அவசியமாக இருப்பதாகவும் கூறினார்.
குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் இதற்கு முன்பாகப் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட மங்கள சமரவீர, பிரேமவதி மனம்பேரி கொலை, கிருசாந்தி குமாரசுவாமி கொலை உட்பட பல குற்ற செயல்களுக்காக ராணுவத்தினர் தண்டிக்கப்பட்டிருப்பதை மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார