முன்பள்ளி சிறார்கட்கு பா.உ. சித்தார்த்தன் பரிசில்கள் வழங்கி வைப்பு

Muzhai03அண்மையில் மூளாய் மனித வள சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா குறித்த முன்பள்ளியில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்ட யாழ் -கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்.சித்தார்த்தன் அங்கு கல்வி கற்கும் மாணவர்கட்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.ச.சசிதரன், குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர், முன்பள்ளி அமைப்பின் நிர்வாகத்தினர், மற்றும் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒

Muzhai01Muzhai02Muzhai04Muzhai05