தனுஸ்கோடி தலைமன்னார் பாதை அமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை-
தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 5.19 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் இந்த முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தபோது பல்வேறு தரப்பாலும் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்த செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளன. 22 கிலோமீற்றர் நீளமான இந்த பாதை, பாலங்கள் மற்றும் கடல்அடி சுரங்கங்கள் ஊடாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.