சஜின் வாஸ் குணவர்தன, பிரேமலால் ஜயசேகர விளக்கமறியல்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 06ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் உட்பட மேலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி பிரதியமைச்சருடன் சேர்த்து மற்றைய ஆறு பேரையும் ஒக்டோபர் 6ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.