ஜனாதிபதி நியூயோர்க்கிற்கு விஜயம்-
ஐக்கிய நாடுகளின் 70ஆவது பேரவை கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நேற்றைய தினம் அமெரிக்கா நோக்கி பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் சென்றடைந்துள்ளார். நிவ்யோர்க் மற்றும் வாசிங்டனுக்கான இலங்கை தூதுவர்கள், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றுள்ளனர். நாளையதினம் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, இருதரப்பு கலந்துரையாடல்கள் பல இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இன்றைய மாணவர்களை சாதனையாளர்கள் ஆக்கவேண்டும்-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-
யாழ். சித்தன்கேணி முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது இவ் நிகழ்வின் போது விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினிஐங்கரன், வலி மேற்கு பிரதேசத்தின் முன்பள்ளி இணைப்பாளர் செல்வி. நிரஞ்சனா, சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், குறித்த முன்பள்ளியின் ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் என பலரும கலந்து கொண்ட நிலையில் குறித்த விருந்தினர்கட்கு மலர் மாலை அணிவித்து சிறார்களின் பாண்ட் வாத்தியம் சகிதம் விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், உரையாற்றும் போது இன்றைய சமூகத்தின் முன் உள்ள சாவால் அறிவுப்புலம் சார்ந்த போட்டி நிலையாவே உள்ளது. இன்றைய சமூகத்தில் பெற்றோர்கள் ஒவ்வோர்வரும் பலத்த முயற்சியின் மத்தியில் மாணவர்களது கல்வி நிலைக்காக போராடி வருகின்றனர். யுத்தத்தின் பின்னரான சூழலில் அழிவுகளாலும் இழப்புக்களாலும் ஏற்பட்ட வீழ்ச்சி நிலை, பொருளாதார சவால்கள் மற்றும் சமகால நிலைகள் என்பன பலத்த சவால்களாக முன்வைக்கப்பட்ட நிலையில் கல்வியில் உயர்வை அடைந்து அதன் வாயிலாக உயர் நிலை நோக்கிய நகர்வுக்கு இன்றைய சிறார்களைத் தயார்படுத்த வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது. நாளைய உலகை நாம் வெல்ல வேண்டுமானால் நாளைய உலகில் நாம் சாதனை படைக்க வேண்டும் ஆனால் அறிவுப் புலத்தில் சாதனையாளர்களாக மாற வேண்டிய நிலை உள்ளது. பெற்றோகள் மணவர்களின் முன்னேற்றத்தில் நல்ல முன் உதாரணங்களை காண்பிப்பதற்கு தயாராக இருக்கவேணடும். அதன் வாயிலாக மாணவர்களின் மனதில் நல் எண்ணங்கள் தோன்றி ஓர் இலட்சியத்தினை நேக்கிய நகர்வு உருவாகும். சிறு வயது முதலாக அவர்களது சிந்தனையில் ஒர் இலட்சியம் நோக்கிய நகர்வு உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பின் ஊட்டல்களைச் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது. சாதனையாளர்களாவதன் வாயிலாக பல விடயங்களில் வெற்றி கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.