பா.உ கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் இரத்ததான நிகழ்வு ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள ஐயனார் சனசமூக நிலையத்தில் மேற்படி சனசமூக நிலையத்தின தலைவர் திரு. யுவராஜ் அவர்களது தலைமையில் அண்மையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வினை யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பின் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.