வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள்)
2015ம் ஆண்டிற்கான வட மாகாண சபையின் உறுப்பினர் ஒதுக்கீட்டு நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 17 பேருக்கான கூரைத்தகரங்கள் மற்றும் நல்லின மாடு, ஆடுகளும்; வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ம.தியாகராஐh, இ.இந்திரராஐh, செ.தர்மபாலா மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. அசங்க காஞ்சனகுமார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் வவுனியா சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆலய குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினரிடம் மேற்படி ஒலிபெருக்கி; சாதனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கல்லாண்டகுளம் வானவில் சிறுவர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நாதன் வாசிகசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சரூபன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் வட மாகாண சபை உறுப்பினர்களான திரு. ஐp.ரி.லிங்கநாதன் மற்றும் திரு. இந்திரராஐh ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் திரு. ஐp.ரி. லிங்கநாதன் அவர்கள், இது சிறுவர்களை மாத்திரம் கொண்ட விளையாட்டுக் கழகமாகும். இந்தக் கழகத்தில் அங்கத்தினராகவுள்ள 53 சிறுவர்களையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்சியாகவும் உள்ளது. இவர்கள் விளையாட்டுக்களில் மாத்திரமல்லாது, கல்வியிலும், பல்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்பதே எமது அவாவாகும். இதற்கு எம்மாலான உதவிகளை நாம் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.