Header image alt text

அனுமதிப் பத்திரமற்ற யாழ் கொழும்பு சேவைக்கான பஸ்களுக்கெதிராக வழக்கு-

busயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 90 பஸ்கள்மீது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் தெரிவித்துள்ளார். அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கு பஸ்களுக்கு தற்போது விதிக்கப்படும் 1000 ரூபா அபராதம் போதுமானது அல்லவென தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் அபராத தொகையை ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தியமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பஸ் தரிப்பிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். Read more

கொத்மலை மண்சரிவில் மூவர் பலி, நால்வரைக் காணவில்லை-

kothmalaநுவரெலியா கொத்மலை வெதமுலவத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கொத்மலை வெதமுலவத்தை லில்லிஸ்லேன் தோட்டத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல்போயுள்ள அதேவேளை, சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்த பகுதியில் மழை பெய்து வருவதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுடன் காணாமல்போனோரை தேடும் பணியில் பொலிஸாரும மீட்புப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியா இடையே பயணிகள் படகுச் சேவை-

indo lanka shipஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல பயணிகள் படகு சேவைகளை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். இந்து – இலங்கை கடலெல்லை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய ஆர்வமாக இருக்கிறது. அத்துடன் கொழும்பு – கொச்சி மற்றும் தலைமன்னார் – ராமேஸ்வரம் ஆகிய படகு சேவைகளையும் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா மேலும் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகங்களுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்-

weeeeபாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளனர். மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட வவுணதீவு சந்தியில் இருந்து, வவுணதீவு பிரதேச செயலகம் வரையில் விசேட தேவையுடைவர்கள் பங்குகொண்ட ஊர்வலம் நடைபெற்றது. மண்முனை மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களை ஒருங்கிணைத்த வாழ்வகம் அமைப்பினால் இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. பெருமளவான விசேட தேவையுடையவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளே ஆஜராகாதீர்கள், நல்லாட்சியில் இவ்வாறான கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், Read more

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க விசாரணைகள்-

abuse (5)சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திரா இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்டபாக அவர் வெளியிட்டுள்ள ஒரு நீண்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொட்டதெனியாவை 5 வயது சிறுமி கொலை சம்பவம் மற்றும் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலை வெளியிடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு, சிறுவர் துஷ்பரயோகம் சம்பந்தமான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தற்போது காணப்படக்கூடிய தண்டணைகளயாவது உடனடியாக குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்கட்கு உரித்தான நீதி-ஜோன் கெர்ரி-

john heryஅமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்கான முக்கியத்துவத்தின் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்யும், நல்லிணக்கத்தை முன்னிறுத்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்வதில் மீள நிகழாதிருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் பிரேரணை ஒன்றை அமெரிக்காவும், இலங்கையும், எமது பங்காளர்களும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பித்தோம். இணை அனுசரணையாளர்களாக இணைந்து கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது, பிரேரணையில் குறிப்பிடப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. Read more