கொத்மலை மண்சரிவில் மூவர் பலி, நால்வரைக் காணவில்லை-

kothmalaநுவரெலியா கொத்மலை வெதமுலவத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கொத்மலை வெதமுலவத்தை லில்லிஸ்லேன் தோட்டத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல்போயுள்ள அதேவேளை, சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்த பகுதியில் மழை பெய்து வருவதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுடன் காணாமல்போனோரை தேடும் பணியில் பொலிஸாரும மீட்புப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியா இடையே பயணிகள் படகுச் சேவை-

indo lanka shipஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல பயணிகள் படகு சேவைகளை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். இந்து – இலங்கை கடலெல்லை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய ஆர்வமாக இருக்கிறது. அத்துடன் கொழும்பு – கொச்சி மற்றும் தலைமன்னார் – ராமேஸ்வரம் ஆகிய படகு சேவைகளையும் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா மேலும் தெரிவித்துள்ளார்.