சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க விசாரணைகள்-

abuse (5)சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திரா இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்டபாக அவர் வெளியிட்டுள்ள ஒரு நீண்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொட்டதெனியாவை 5 வயது சிறுமி கொலை சம்பவம் மற்றும் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலை வெளியிடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு, சிறுவர் துஷ்பரயோகம் சம்பந்தமான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தற்போது காணப்படக்கூடிய தண்டணைகளயாவது உடனடியாக குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மரண தண்டணையோ அல்லது சிறைத் தண்டணையோ வழங்கப்படுவதன் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களை முழுமையாக இல்லாதொழிக்க முடியாதென்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.