தண்டுவான் பகுதியில் வரவேற்பு நிகழ்வும் கலந்துரையாடலும்-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு தண்டுவான் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஆகியோரை பிரதேச மக்கள் வரவேற்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் இன்றுபிற்பகல் 3 மணியளவில் தண்டுவான் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், ரவிகரன் ஆகியோரும், பாடசாலையின் அதிபர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கிராம மக்கள் தங்களுடைய பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் என்பன தொடர்பில் விரிவாக தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.