வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பு இல்லத்திற்கு உதவி-(படங்கள்)
முத்துஐயன்கட்டு அன்பு சிறுவர் இல்லத்தினர் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் பிள்ளைகளுக்கான நுளம்பு வலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை என்பவற்றினை தந்துதவுமாறு கேட்டிருந்தனர் இதற்கமைவாக நேற்று முன்தினம் (23.09.2015) சுமார் 16500 ரூபா பெறுமதியான 33 புத்தக பைகளும் 13500 ரூபா பெறுமதியான 30 நுளம்பு வலைகளும் அன்பு இல்ல நிர்வாகத்தினரிடம் அன்பு இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையினை எமது வட்டுக்கோட்டை உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனாக முன் வந்து வழங்கியுள்ளார். (தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம்)