இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேணைக்கு ஆஸி ஒத்துழைப்பு-

australiaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணை பங்களிப்பை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த யோசனைக்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸோப் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் குறித்த யோசனை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் தமது பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-

landslideநாட்டில் நிலவும் அதிக மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த மாவட்டங்களில் மலைமேடு மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.

இன்று உலக சுற்றுலா தினம்-

tourism dayஇன்று உலக சுற்றுலா தினமாகும். பில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு பில்லியன் கணக்கான சந்தர்ப்பம் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும். கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1.5 டிரிலியன் ஷரூபான சுற்றுலாத்துறையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் சுற்றுலாத்துறையில் 3.4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுவன் கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல்-

jail.......கொழும்பு புறநகர் அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 50வயதான இவர் கடுவலை – கொத்தலாவல பகுதியைச் சேர்ந்தவர். பியகமவில் நேற்று சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தந்தையைப் பழிவாங்கும் நோக்கமே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது. மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதத்தை காட்டுவதற்காக சந்தேகநபர் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு அவரை அழைத்துச்சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வங்கியில் கொள்ளை-

robbery (4)கொழும்பு 2 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிலொன்றில் வந்தவர்களால் வங்கியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கியின் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் கொள்ளையர்கள் 55 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் இன்றுகாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

100 வருடத்திற்கு மேற்பட்ட பழைமையான பீரங்கி மீட்பு-

peranki100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டுவதற்கு முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட குறித்த பீரங்கி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.