இணை அனுசரணை அறிவிப்பு பிரதமர் ரணிலின் இரட்டை சாணக்கிய வியூகத் திறன்-

_DSC0369ஐ.நா, அமெரிக்கா போன்ற சர்வதேச சமூகத்தையும் தமிழர் தம் அரசியற் தலைமையையும் ஒன்றாகவே இவ்விணைச் சொல்லில் கையாளும் சாணக்கியமாகும் — கலாநிதி நல்லையா குமரகுருபரன் –

ரணில் விக்ரமசிங்க இன்று சர்வதேச அழுத்தத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுதலை பெற்றுவிட்டது எனவும், இலங்கையை சர்வதேச விசாரணையிலிருந்து மீட்டெடுத்ததாகவும் கூறுகின்ற இந்த ஆளும் அரசின் சாணக்கிய வெற்றி முரசிற்கு ஈடாக தமிழ் தலைமை யுத்தகால இழப்புகள் சம்பந்தமாக தமது சாணக்கியத்தை எப்படி வெளிப்படுத்த போகின்றது ? எனும் கேள்வி எழுகின்றது என்பது தமிழ் தலைமையின் பலம் சார்ந்த முக்கியமான விடயம் எனவும் தமிழ் தேசிய பணிக் குழு பொதுச்செயலாளர், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்

தாம் சாரந்தவர்களுக்கு ”பொறுப்புக்கூறல்”, என்பதுதான் இன்று வௌ;வேறு வகைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், அதேபோல த தே கூ சார்பாக பேசவல்ல எம்,எ.சுமந்தரனுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கா விற்கும் இருக்கின்ற முக்கிய பங்காற்றுகை.குறிப்பாக ஐ நா மனித உரிமைப் பேரவை அதனை இயக்கம் நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்ற்கும் அமெரிக்கவிற்கும் அதேவேளை இயல்பாகவே இந்நாட்டின் சிங்கள மக்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது. தமிழ் மக்கள் பற்றிய பொறுப்புக் கோரல் அவர்களுக்கு இருப்பதாக அவர்களுக்கு எண்ணமொன்று இருப்பதாக தெரியவேயில்லை. அதே போல த.தே.கூட்டமைப்பு தம்மைத் தமது தலைமையாக கொண்ட தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. சுமந்திரன் தன்னை நம்பி அனுப்பிய த.தேகூ தலைவருக்கும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. எனவே தான் ”பொறுப்புக்கூறல்”, என்பது முக்கிய பங்காற்றுகை வார்த்தையாக அமைகின்றது .

இந்த “பொறுப்புக் கூறல்கள்” எதுவும் தமிழ் மக்கள் அடைந்த வரலாறு காணாத இறுதி யுத்தத்தினால் ஏற்றப்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பை ஈடு செய்ய மாட்டாது. ஆனாலும் அவரவர் ஏற்றுக்கொண்டுள்ள பணிகள் இன்று முன்னெடுக்க படுவதற்ற்கு குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டதொடர் தான் காரணமாக அமைகின்றது. ஆட்சி மாற்றத்திற்ற்கு தமிழ் மக்கள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றனர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் பழைய அரசின் ஊழல் பற்றி விசாரணைகள் நடாத்த முனைகையில் இறுதி யுத்தத்தால் ஆன தமிழ் மக்களின் இழப்பு, எல்எல்ஆர்சி அறிக்கை நடை முறைபடுத்தல் பற்றி அரசாங்கம் எதுவும் சிந்திக்க வில்லையே. உள்ளுர் விசாரணை பற்றி ஏதும் முன்னெடுப்பு செய்யவில்லையே. உள்நாட்டில் விசாரணையை நடத்துவதற்ற்கு ஐநாவின் அறிவுறுத்தலோ ,இந்தியாவின் அனுசரணையோ அமெரிக்காவின் அங்கீகாரமோ தேவையில்லை. புதிய அரசிற்கு இது ஒரு பெருங் கடைமையாக இருந்தது.

தமிழ் தலைமை இதுபற்றி கேட்குமென அரசாங்கம் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் இது சர்வதேச விசாரணைக் குரியது என்பதே புலம்பெயர்ந்த தமிழர், த.தே.கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் அனைவரதும் நியாயப்பாடும் நிலைப்பாடும் ஆக இருக்கின்றது. இன்று இது பேசப்படுவதற்கு காரணம் ஐ நா மனித உரிமைப் பேரவை தனது நேரசூசிகைக்கேற்;ப தனது பணிகளை கையாள்கையில் ஏனைய விடயங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் அதன் செயற்பாட்டினுள் உள்வாங்கப்படுகின்றார்கள், உள்வாங்கப்பட்டார்கள். இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை தொடர் கூட்டம் இல்லையானால்இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி யார் பேசுவது, எங்கே பேசுவது இது தான் யதார்த்த நிலைபரம். மேலும் காலம் தாழ்ந்த நீதி மறுக்கப்பட்ட நீதி (துரளவiஉந ளை னநடயலநன ளை துரளவiஉந னநnநைன) எனும் கருத்து இங்கு வலுப்பெற்று மிளிர்ந்து நிற்கின்றது என்பதே எனது நிலைப்பாடு.

ஐ நா கூட்டத் தொடர் காலத்திற்ற்கு காலம் வருகின்றபோது விளைவுகள் வீரியம் தணிந்து போவதை நாம் காணலாம். சர்வதேச விசாரணையும் உள்ளுர் விசாரணையும் எனப் பேசப்பட்டது. பின்னர் ஹாய் பிரிட்(ர்லடிசனை) சிறப்புக் கலப்பு நீதி மன்றாகி இறுதியாக ஐ நா சபை கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடர் முடிவுறும்போது உள்ளுர் விசாரணைக் கொமிசனாகி அமையும் என எதிர்பார்க்கலாம். இதில் தற்போதைய அரசின் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் வியூகம் வெற்றிபெற்றிருப்பதை காணலாம்.
யுத்தக் குற்ற விசாரணை என்பது ஒரு நாட்டிற்கு எதிரானது அல்ல மாறாக யுத்தக்குற்றம் புரிந்தவர்களுக்கே எதிரானது எனவே தற்போதய ரணில் -மைத்ரி அரசு யுத்தக்குற்றத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. ஆனாலும் பல் வேறு விடயங்களில் மஹிந்த அரசை, பங்காளிகள் சிலரை விசாரணைக்குட்படுத்தும் இன்றைய அரசு யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட இன்னலுக்கு பேரிழப்புகளுக்கு விசாரணை கொமிசன் அமைக்க முன்வரவில்லை. ஏனென்றால் சிங்கள மக்கள் வேறுபட்ட பார்வை கொண்டு பாரக்;கின்றார்கள் தமிழ் மக்களின் இன்னல் இழப்புகள் என்பவற்றை விட தமிழர் போராட்டம் அல்லது புலிகள் தோற்ற்கடிக்கப்பட்டதாகவே பார்க்கின்றாகள். இது தான் உண்மை. ஆனால் யுத்தக் குற்றத்தின் காரணமாக சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று முடிவுற்றாலும் தமிழர் தம் வாழ்விற்கு கிடைக்கப்போகும் நீதி என்ன? அல்லது ஒருசில நாடுகளில் இடம்பெற்றதான ஒரு விசாரணைக்கு இங்கு இடமில்லை. விசாரணை ஒரூவகையாக அமைந்தாலும் இலங்கை விடயத்தில் விடயங்கள் காலதாமதமாகின்றபோது காலம் தாழ்ந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாகின்றது. உள்நாட்டில் விசாரணையை நடத்துவதற்ற்கு ஐநாவின் அறிவுறுத்தலோ, இந்தியாவின் அனுசரனையோ அமெரிக்காவின் அங்கீகாரமோ தேவையில்லை.

தமிழினத்தின் யுத்தத்தால் விளைந்த பிரச்சனைகள் பலப்பல. இவையொன்றும் தீர்க்கப்படவில்லை. மீள்குடியேற்ற விடயம், விதவைகள் வாழ்வாதார விடயம், அரசியற்கைதிகள் விடுதலை அடுத்த கட்டமாக இடிந்த கோவில்கள், இடிக்கப்பட்ட கோவில்கள் என்பனவற்றின் மீள்கட்டுமானம் என பல்வேறு விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.. மீள்குடியேற்ற விடயத்திலேயே பார்க்கின்றபொழுது மீள்குடியேற்ற அமைச்சு தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கலாம் .ஆனால் பெரும்பான்மையானவை விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட தமது காணிக்கு வேலியடக்கவே பணமில்லாத பல குடும்பங்கள் இருக்கின்றன. தமது வீடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள் குடிசைகளை அமைத்து வாழவேண்டி யுள்ளது. மீள் குடியேற்ற அமைச்சின் பணி வெறுமனே காணி விடுவிப்பு மட்டுமல்ல அதை விரைவாக செய்வதில் தடையேதும் இருக்க முடியாது. ஏன் காலம் தாழ்த்த வேண்டும். வெளிநாட்டு உதவிகளுடன் வீடமைப்பு பணி, வீடமைப்புக்கான நிதி வழங்கல் கட்டாயமாக முன்னெடுக்கப்படவேண்டும் .அதற்கான உதவி வழங்க வல்ல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை அமைச்சர் செய்ய வேண்டும். போர் முடிந்து எத்தனை ஆண்டுகள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் நமது மக்களே என அரசு சிந்தித்து இருக்கவில்லையே உள்நாட்டில் விசாரணையை நடத்துவதற்ற்கு ஐ நா வின் அறிவுறுத்தலோ, இந்தியாவின் அனுசரனையோ அமெரிக்காவின் அங்கீகாரமோ தேவையில்லை ஆனால் அமைக்கப்படவில்லை. எனவே விசாரணை பொறிமுறை சர்வதேசத்தை திருப்தி படுத்தும் நோக்கிலானதே ஆகும்.

ரணில் விக்ரமசிங்க இன்று சர்வதேச அழுத்தத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுதலை பெற்றுவிட்டது என்று மார்தட்டும் ராஜதந்திரம் கொண்ட சிங்கள தலைமையின் சாணக்கியம் வெற்றிபெற்றுவிட்டது. இந்த ராஜதந்திரதிற்கு ஈடாக தமிழ்த் தலைமை என்ன செய்யப்போகின்றது.??? தமிழ் தலைமையின் ராஜதந்திரமும்” இணை அனுசரணை” என்று தாலாட்டுமா? பாராட்டுபெறுமா?? இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்பின் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் உணரப்படவில்லை எனும் கேள்வியும் எழுகின்றது.