பா. உ சரவணபவன் அவர்களால் விளையாட்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு-
கடந்த 26.09.2015 அன்று யாழ். சங்கானை நிச்சாமம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நிகழ்த்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ் நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் உரையாற்றும்போது எதி;வரும் காலங்களில் மேற்படி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அபிவிருத்தியின் பொருட்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.