உள்ளுராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்-பிரதமர்-
எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நடத்தப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளன. பிரதான கட்சிகள் கைகோர்த்துள்ளதால் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இத் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் கைக்கோர்த்துள்ள கட்சிகள் இரண்டும் தனித்தனியே போட்டியிடும் என அவர் மேலும் கூறினார். பிரதமரின் கருத்துக்கு இரண்டு பிரதான கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.