Header image alt text

உடையார்கட்டு குடவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

Captureமுல்லைத்தீவு, உடையார்கட்டு குடவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் 01.10.2015 அன்றுமுற்பகல் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் செல்வநாயகம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் ராஜேஸ்வரன் சிறீலங்கா சைல்ட் பண்ட் நிறுவன முகாமையாளர், சேவ் த சில்ட்ரன் அமைப்பின் முகாமையாளர் தண்ணீரூற்று சாய் சமுர்த்தி தலைவர் தவராஜா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது சிறுவர்களின் நடனம், அபிநய நடனம், பேச்சு, நாதஸ்வர கச்சேரி, சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more

வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் சுயதொழில் முயற்சிக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_1711வவுனியாவில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண சபை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட 17 குடும்பங்களுக்கு நேற்று (02.10.2015) கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் வைத்து தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், திணைக்கள ஊழியர்கள், பயனாளிகள், மாகாண சபை உறுப்பினரின் பிரேத்தியேக செயலாளர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், கழகத்தின் ஊடக இணைப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு பயனளிக்காது-தமிழக முதல்வர்-

jeyalalithaஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக இருக்காது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 16.9.2015 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கையே போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன். எனினும், மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித நேர்மறை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இத்தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ள தீர்மானம்தான் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு உடனடி இடமாற்றம்-

police ...சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மேலும் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பொலிஸ் விஷேட பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தனபால, தங்கள்ளை பொலிஸ் வலயத்திற்கும், அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எம்.எச் மசோ பொலிஸ் விஷேட பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வெலிப்பன்னை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.எஸ். அதிகாரி புத்தளம் வலயத்திற்கும், கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எல். ராஜமந்திரி வெலிப்பன்னை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கெட்டகதனிய சிறுமிக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்-

sssகெட்டதனியாவை பகுதியில் வன்கொடுமைக்க உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி சேயா செதவ்மிக்கு நியாயம் வேண்டி யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய மாக்சிச லெனினிச கட்சியும், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நேற்று வித்தியா, இன்று சேயா, நாளை யார், படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவிற்கு நீதி வழங்கு, பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்புணர்வுகளை நிறுத்து, போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு சிறுவர்களும் பெண்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை வண்மையாக கண்டிப்பதாகவும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இணைந்து தமது கண்டங்களையும் வெளிட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம்-

ranilஐந்து நாட்கள் விஜயமாக ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் ஒசாகா – கன்யாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜப்பானின் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்புகள் குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.வீ.சன்-சீ கப்பலில் சென்ற இருவர் யுத்தக்குற்றவாளிகள்-

mv shansiஎம்.வீ.சன்.சீ. கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர். இந்த கப்பலில் உள்ள அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இரண்டு பேர் யுத்தக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்திருப்பதாக அந்த நாட்டின் குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறை முடிவுக்கு வந்தபின்பே சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது-இரா.சம்பந்தன்-

sdfdfdfdfசர்வதேச அகிம்சை தினம் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். மதத்தலைவர்கள் உட்பட சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உட்பட பல அரசியலர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, சிவபூமி மாணவர்கள், மற்றும் நவீல்ட் மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை இலங்ககைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். Read more