உடையார்கட்டு குடவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

Captureமுல்லைத்தீவு, உடையார்கட்டு குடவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் 01.10.2015 அன்றுமுற்பகல் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் செல்வநாயகம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் ராஜேஸ்வரன் சிறீலங்கா சைல்ட் பண்ட் நிறுவன முகாமையாளர், சேவ் த சில்ட்ரன் அமைப்பின் முகாமையாளர் தண்ணீரூற்று சாய் சமுர்த்தி தலைவர் தவராஜா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது சிறுவர்களின் நடனம், அபிநய நடனம், பேச்சு, நாதஸ்வர கச்சேரி, சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன. CaptureCaptureh photo 1