வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் சுயதொழில் முயற்சிக்கு உதவி-(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண சபை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட 17 குடும்பங்களுக்கு நேற்று (02.10.2015) கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் வைத்து தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், திணைக்கள ஊழியர்கள், பயனாளிகள், மாகாண சபை உறுப்பினரின் பிரேத்தியேக செயலாளர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், கழகத்தின் ஊடக இணைப்பாளர் வி.பிரதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.