மன்னார் கருக்காய்க்குளத்தில் பாரம்பரிய மாட்டுவண்டி சவாரி-(படங்கள் இணைப்|பு)

photo (2)மன்னார் கருக்காய்க்குளம் மைதானத்தில் இரட்டை மாட்டுவண்டி சவாரிப் போட்டி நேற்று (03.10.2015) மாலை 3 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சும், மன்னார் மாவட்ட செயலகமும், மாட்டுவண்டிக் கழகமும் இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தன. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்) வைத்தியக்கலாநிதி குணசீலன், திரு. சுவைவா ஆகியோரும் முக்கிய அரச அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

photo (2) photo (1)~1 photo (3) photo (4)