Header image alt text

இலங்கை, ஜப்பான் பிரதமர்களிடையே 2ஆம் சுற்றுப்பேச்சு-

lanka japanஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாம் நாளான இன்று அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது சுற்றாகவும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜப்பான் பிரதமர் உறுதியளித்துள்ளார். இதேவேளை, ஜப்பான் மற்றும் இலங்கைப் பிரதமர்களுக்கு இடையில் இன்று முற்பகல் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி வவுனியாவில் கையெழுத்து-

signatureமாணவி வித்தியா மற்றும் சிறுமி சேயா ஆகியோர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. மாணவி வித்தியா மற்றும் சிறுமி சேயா ஆகியோரை கொடூரமான முறையில் வன்கொடுமை புரிந்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனையை வழங்க வேண்டும் என பலரும் இதில் கையொப்பம் இட்டனர். இதேவேளை, குறித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை வலியுறுத்தி யாழில் இருந்து கொழும்பு நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் நடைபவணி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாகவே இக் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெறுகிறது. இதில் இலங்கை போக்குவரத்துச் சபை உழியர்கள், சாரதிகள், நடத்துனர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

ரயில் தடம்புரண்டதால் வடக்குக்கான சேவை பாதிப்பு-

trainவடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல – கல்கமுவ வரையான பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதனால் வட பகுதிக்கான ரயில் போக்குவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இரண்டு ரயில் பெட்டிகள் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில்கள் கல்கமுவ ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நவுரூ தீவில் சுதந்திரமாக நடமாட அனுமதி-

navuru......அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய நிலையில் பசிபிக் தீவான நவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள், அந்த சிறிய தீவில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ்ரூ அரசாங்கம் நேற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி இந்த முகாம் திறந்த வெளி மையமாக செயல்படும் என நவுறு அரசாங்கம் சுட்டிகாட்டியுள்ளது. இதன்மூலம் அவர்களது அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை சுதந்திரமாக அந்த தீவில் நாடமாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நவுறு தீவில், இலங்கையர்கள் உட்பட 600 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஆணைக்குழு 2ஆவது அறிக்கையை நிறைவு செய்துள்ளது-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு தமது விசாரணைகள் குறித்த இரண்டாவது அறிக்கையையும் நிறைவு செய்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் அறிக்கையும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான திகதியை எதிர்பார்த்திருப்பதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

சமன் ஜயலத் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்-

kondaiya brosகொட்டதெனிய சிறுமி சேயா சதெவ்மியை கொலைசெய்ததாக பொறுப்பேற்றுக் கொண்ட சமன் ஜயலத் மரபணுப் பரிசோதனைக்காக பொரள்ளையில் உள்ள ஜுன்டெக் நிறுவனத்திற்கு இன்று முற்பகல் அழைத்து வரப்பட்டார். மினுவாங்கொடை நீதிமன்ற நீதிவான் வழங்கிய அனுமதிக்கு இணங்க சமன் ஜயலத் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் கொண்டயா என்படும் துனேஷ் பிரியசாந்தவின் மூத்த சகோதரர் ஆவார். அவரை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியமைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக மாணவர்களுக்கு விளக்கமறியல்-

dffdfdfdfதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம் முகம்மது பஸீல் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோதே அவர்களை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். Read more

யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18பேருக்கு விளக்கமறியல்-

courtsயாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின்மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், சிறைச்சாலை வாகனமும் தாக்கப்பட்டது. Read more

கோட்டாபய ராஜபக்சவின் மனு ஒத்திவைப்பு-

gotabaya......பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தான் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த, மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த மனுமீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதிவாதிகளாக புதிய அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டியது அவசியம் என, மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். Read more

ஜனக பண்டார தென்னக்கோன் கைது-

janaka1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது மகன் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரமித்த பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எது எவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பம் இடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read more