Header image alt text

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதன் மூலமே குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்-சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthanயுத்த காலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்­பாக இருந்ததோடு நள்ளிரவிலும் கோவில் திரு­வி­ழாக்கள் முடிந்து வீடு திரும்பும் நிலை காணப்பட்­டது. ஆனால் இன்று பெண்கள் வீட்டி­லி­ருந்து வெளியே செல்­வ­தற்கே அஞ்­சு­கின்­றனர் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. தர்ம­லிங்கம் சித்­தார்த்தன். சட்டம், ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளதன் கார­ண­மா­கவே வடக்கு, கிழக்கு உட்­பட நாடு முழு­வதும் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்றும் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மரண தண்­டனை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சித்­தார்த்தன் எம்.பி. இவ்வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், வடக்கு, கிழக்கில் இன்று சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­ப­டு­வதும் குழுக்­க­ளாக இணைந்து வாள் வெட்­டுகள் இடம்­பெ­று­வதும் அதி­க­ரித்­துள்­ளன. வடக்கில் வித்­தியா என்ற மாணவி பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டு கொடூ­ர­மாக கொலை­செய்­யப்­பட்டார். அது இன்று தெற்­கிலும் பரவி விட்­டது. சேயா என்ற சிறுமி இதே­போன்று கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டுள்ளார். வடக்கில் யுத்த காலத்தில் கூட பெண்கள் அச்­ச­மின்றி நட­மா­டி­னார்கள். Read more

பாடசாலை மாணவர்கட்கு உதவி-

P1070653யாழ்ப்பாணம் வலி மேற்கு முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரின் விசேட அழைப்பின்பேரில் அங்கு வருகை தந்திருந்த தெல்லிப்பளை வித்தகபுரத்தினை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட வைத்திய நிபுணர் திரு. சி.நவரட்ணம் அவர்கள் வலி மேற்கின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் சுழிபுரம் பகுதியில் நடத்தப்பட்டு வரும் இலவச கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து 80 பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 1000 பெறுமதியுடைய கற்றல் உபகரணங்களை கையளித்துள்ளார் இவ் நிகழ்வில் லண்டனில் இருநது வருகை தந்திருந்த வைத்திய நிபுணர். திரு. ந.கணேஸ், விரிவுரையாளர் திருமதி. கணேஸ், குறித்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள், குறித்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வலி மேற்கு முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

வேலையில்லா பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது-

graduateமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்க கோரி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பான உண்ணாவிரத போராட்டம் நடாத்திவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இவ்வாறான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய பெருமளவான வேலையற்ற பட்டதாரிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். நாங்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைகள் மற்று போராட்டங்களை நடாத்தியபோதும் எமக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு மத்திய அரசும், மாகாணஅரசும் இழுத்தடிப்புச் செய்துவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் உள்ளனர் அவர்கள் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி மிகுந்த கஸ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். Read more

இலங்கைக்கு ஜப்பான் உதவி வழங்குவதாக உறுதி-

japanஇலங்கையின் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த உதவுவதாகவும் ரோந்துக் கப்பல்களை வழங்குவதாகவும் ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த போதே அவர் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார். இலங்கை தற்போது முன்னைய அரசாங்கத்தின் சீனா சார்பு கொள்கையிலிருந்து நகர்ந்து வருகின்றது. மேலும் ஜப்பானுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்படுகின்றது. இதேவேளை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக உதவ சுமார் 45.4 பில்லியன் யென்களை வழங்க அபே உறுதியளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை தமது அரசாங்கம் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத் தன்மை மூலம் மிகவும் சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதாக ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அந்தநாட்டு மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜப்பான் மன்னரால் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க, அனுச பெல்பிட்டவுக்கு நிபந்தனைப் பிணை-

lalith anuraகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட ஆகியோர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குஸலா வீரவர்த்தனவால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ஷரூபா பணத்தில், நாட்டின் அனைத்து விஹாரைகளிலும் உள்ளவர்களுக்கு ´சில்´ துணிகளை பகிர்ந்தளித்தமை தொடர்பில், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைகளில் லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது இந்த வழக்கு தொடர்பில் அவர்களது அதி உச்ச ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும், சாட்சியாளர்களை அச்சுறுத்த மாட்டார்கள் எனவும், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். மேலும் அவர்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறும் கோரினார். இதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, ஒரு இலட்சம் ஷரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ஷரூபா சரீரப் பிணைகள் மூன்றில் இவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

மாணவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்-

sddfdfdfவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாகக் கூட்டம் கூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 13 மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்;வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை விடுதலை செய்வது தொடர்பில் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்குமிடையில் நேற்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யுமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களில் ஈடுபடுவதில்லையென உறுதியளிக்குமாறும் மாணவர்களிடம் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். இதன்போது, அத்துமீறிய மற்றுமொரு மாணவர் குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்ட மாணவர்களையும் இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை-

talathaசுற்றுலா வீசாவில் வெளிநாட்டு வேலை வாய்புக்காக பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் இடம்பெரும் பாரிய அளவிலான மோசடிக்கு எதிராக, பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்றையதினம் இடம்பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் குவைத் நாட்டுக்கு சென்ற 11 இலங்கையர்கள் அந்த நாட்டு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் சுற்றுலா விசாவில் வேலை வாய்ப்புக்காக சென்றமையே இதற்குக் காரணம். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அதிகாரிகளும் இதில் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனக பண்டார தென்னக்கோன் விளக்கமறியல்-

janakaகைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 1999ம் ஆண்டு தம்புள்ளை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் ஜனக பண்டார கைதுசெய்யப்பட்டிருந்தார். கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்ததோடு, தொடர்ந்தும் அதே வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின்கீழ் அவரை சிகிச்சை பெற அனுமதித்தனர். இந்தநிலையில் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய இன்று சந்தேகநபரை விசாரிக்க குறித்த வைத்தியசாலைக்கு சென்றார். இதனையடுத்து அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஓசாமாவை கொன்றவருக்கு ஜ.எஸ் கொலை மிரட்டல்-

555அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கவின் நேவி சீல் படையின் வீரர் ரோப் ஓநெய்லுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒசாமா பின் லேடனை நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்ற வீரர்களில் ஒருவரான நெய்ல் தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று பூட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவரை வேறு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த அமெரிக்க பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக்கான தொடரூந்து சேவைகள் இயல்புக்கு வந்தது-

trainதடைப்பட்டிருந்த வடக்குக்கான தொடரூந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பன்பொல மற்றும் கல்கமுவ தொடரூந்து நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி தொடரூந்து ஒன்று நேற்று தடம்புரண்டது. இதன் காரணமாக தொடஷரூந்து பாதையும் சேதமடைந்தது. இதனை அடுத்து கொழும்பு காங்கேசன்துறை மற்றும் கொழும்பு மன்னார் இரவு நேர இரு வழி அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், திருத்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்றுகாலை 5.45க்கு கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கான தொடரூந்து சேவை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டைய்யாவின் டீ.என்.ஏ பொருந்தவில்லை-

kondaiyaசிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன்டேக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட டீ.என்.ஏ மாதிரி தொடர்பான அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மினுவான்கொட பிரதம நீதவானிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரிகள் கொண்டையாவின் டீ.என்.ஏவுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் கொடஹதெனியா பகுதியில் 5வயது சிறுமியான சேயா துஸ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர் கைதானதோடு தானே கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து குறித்த கொலை தொடர்பில் கொண்டைய்யாவின் சகோதரர் கைதுசெய்யப்பட்டார். Read more

விஸ்வமடு பாலியல் வழக்கு இராணுவத்தினர்க்கு கடூழிய சிறை-

jaffna courtsகிளிநொச்சி விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் அவர்கள் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நான்கு இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, குறித்த இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக இந்த வழக்கில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. வழக்கு விசாரணையின்போது, நான்காவது நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார். குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் அவர் தெரிவித்தார்.
Read more