பாடசாலை மாணவர்கட்கு உதவி-
யாழ்ப்பாணம் வலி மேற்கு முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரின் விசேட அழைப்பின்பேரில் அங்கு வருகை தந்திருந்த தெல்லிப்பளை வித்தகபுரத்தினை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட வைத்திய நிபுணர் திரு. சி.நவரட்ணம் அவர்கள் வலி மேற்கின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் சுழிபுரம் பகுதியில் நடத்தப்பட்டு வரும் இலவச கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து 80 பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 1000 பெறுமதியுடைய கற்றல் உபகரணங்களை கையளித்துள்ளார் இவ் நிகழ்வில் லண்டனில் இருநது வருகை தந்திருந்த வைத்திய நிபுணர். திரு. ந.கணேஸ், விரிவுரையாளர் திருமதி. கணேஸ், குறித்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள், குறித்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வலி மேற்கு முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.