இலங்கைக்கு ஜப்பான் உதவி வழங்குவதாக உறுதி-

japanஇலங்கையின் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த உதவுவதாகவும் ரோந்துக் கப்பல்களை வழங்குவதாகவும் ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த போதே அவர் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார். இலங்கை தற்போது முன்னைய அரசாங்கத்தின் சீனா சார்பு கொள்கையிலிருந்து நகர்ந்து வருகின்றது. மேலும் ஜப்பானுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்படுகின்றது. இதேவேளை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக உதவ சுமார் 45.4 பில்லியன் யென்களை வழங்க அபே உறுதியளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை தமது அரசாங்கம் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத் தன்மை மூலம் மிகவும் சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதாக ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அந்தநாட்டு மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜப்பான் மன்னரால் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.