ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு இன்று முதற்கட்டமாக ஆரம்பம்!! (படங்கள் இணைப்பு)
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு நேற்று புதன்கிழமை (07.10.2015) முதற்கட்டமாக, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆரம்பமாகி முதல் நாள் அமர்வு இனிதே நிறைவுபெற்றது. அந்த வகையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 09 நிலையங்களில் 23 பாடசாலைகளிலும், வவுனியா மாவட்டத்தில் 06 நிலையங்களில் 21 பாடசாலைகளிலும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 04 நிலையங்களில் 11 பாடசாலைகளிலும் கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து எதிர்வரும் தினங்களில், தொடர்ச்சியாக இவ் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறும் என கருத்தரங்கின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.