பொலிஸ் மா அதிபர் சீனாவிற்கு விஜயம், பதில் பொலிஸ் மாஅதிபர் நியமனம்-

illangakoonபொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். பொலிஸ் மா அதிபர் தவிர மேலும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் 05பேர் இந்த விஜயத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேதுங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கஜசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ஏ.பி. ரொமேஷ், மற்றும் டீ. எஸ் விக்ரமசிங்க ஆகியோர் பொலிஸ் மா அதிபரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் நேற்று இங்கிருந்து புறப்பட்ட அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கவுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மீண்டும் நாடு திரும்பும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ் எம் விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த சீனாவின் சிறப்பு பிரதிநிதி நியமனம்-

sri lanka chinaஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக சீனா அரசாங்கத்தினால் சிறப்பு பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சீனா பிரதிநிதியாக கடமையாற்றியுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் உப அமைச்சரான லியு ஷென்மின் இதற்காக நியமிக்க்பட்டுள்ளதாக சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான தகவலை ‘சௌத் சைனா மோனிங் போஸ்” என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் முன் எடுக்கப்படும் சீனா முதலீடுகள் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கருத்து பரிமாறல்களை மேற்கொள்வதே இவரது கடமை என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 வருடங்களாக நாட்டில் முன்எடுக்கப்பட்;ட உட்கட்டமைப்பு செயற்திட்டங்களில் 70 சதவீதமான முதலீடுகளை சீனா அரசாங்கமே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனா அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி லியு ஷென்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பெறுபேறு-

sddddfdfதரம் 05 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்ற நிலையில் யாஃவடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சிவநேசன் மதுசாயினி 189 புள்ளிகளைப் பெற்று குறித்த பாடசாலையில் 01 இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் 04 ம் இடத்தை பெற்றுள்ளார்.