அவன்காட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்-

navy captainஇலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்த அவன்காட் என்ற கப்பல் தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த கப்பல் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கப்பல் இலங்கை கொடியுடன் காணப்பட்டமையால், அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் விசாரணை நடத்த முழுமையான அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கப்பலில் 30 பணியாளர்கள் காணப்பட்டனர். அதன் கப்டன் யுக்ரேய்ன் நாட்டவர். கப்பலில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கப்பல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்பட்டதால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு காரணமாக குறிப்பிட்ட கப்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உறுப்பினர்களின் விபரங்கள் அனுப்பிவைப்பு-

parliamentஅரசியலமைப்பு பேரவையினால் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இன்றுகாலை கூடிய அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்று சபையினால் குறித்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் கூடிய அரசியலமைப்பு பேரவை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 4ம்திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றையதினம் சுயாதீன ஆணைக்குழுக்கள் சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்ககப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து 73 இலங்கையர்கள் நாடு திரும்பல்-

refugeesதமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 73 இலங்கையர்கள் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தின்போது கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம் உதவி வழங்கியுள்ளது. இதேவேளை, குறித்த ஆணையகத்தின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை இந்தியாவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பரிந்துரை-

sri lanka (4)இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 4 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் சபாயாநகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். இதற்கமைய, லஞ்ச மற்றும் ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, மனித உரிமைகள், அரச சேவைகள் மற்றும் தேசிய காவற்துறை ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளுக்கான அனுமதியினை பெற்று கொள்வதற்காக அவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.