Header image alt text

60 வீதமான குடும்பங்களுக்கு இந்திய வீடுபெறத் தகுதியில்லை-

sampoorதிருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்திய-உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவான குடும்பங்களில் 59 வீதமான குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வீடுகளை பெற விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் புள்ளிகளின் அடிப்படையிலேயே இந்த குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பிரதேசத்தில் அதிகாரபூர்வமாக 344 குடும்பங்கள் 9 ஆண்டுகளின் பின்னர் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து மீளக்குடியேறியுள்ளன. அப்பகுதியில் அரச முதலீட்டு வலயத்திற்கு என சுவீகரிக்கப்பட்டு பின்னர் முதல் தொகுதியாக விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மட்டும் 204 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இந்த குடும்பங்களே முன்னுரிமை அடிப்படையில் இந்திய உதவி வீடுகளுக்கு பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவாகியிருந்தன. இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் யு.என். ஹபிட்டாஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 84 குடும்பங்கள் மட்டுமே அந்த வீடுகளைப் பெற தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது பற்றிய கூட்டமொன்றில் யு.என் ஹபிட்டாஸ் உட்பட அதிகாரிகளினால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து குடும்பங்களும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, நிபந்தனைகள் அல்லது புள்ளிகள் தொடர்பில் தாங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார். Read more

இலங்கைக்கான நிதி உதவி அதிகரிக்கப்படும்-உலக வங்கி-

world bankஇலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பில், உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகர் லீமாவில் நேற்றுமுன்தினம் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பமாவதற்கு முன்பாக அவற்றின் அதிகாரிகளை சந்தித்து நிதி அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதாரம், ஏற்றுமதி, தொழில் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தவும், வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளை ஊக்குவிக்கவும் அதிகநிதி உதவியை வழங்குவதற்கு இதன் போது உலக வங்கியின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடை யிலான புரிந்துணர்வு வலுப் பெற்றுள்ளதாகவும் அது சிறந்ததொரு முன்னேற்றமாகும் எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 188 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வழிமுறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றவுள்ளார் என அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-

ooகடந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வி. யெநாதன் யெனந்தினி செல்வி. தவராசா கிரிசிகா செல்வி. சாந்தலிங்கம் ரேனுஜா மற்றும் செல்வி. சூரியகாந்தன் சௌமியா ஆகியோரை கௌரவிக்கும் முகமாகவும், கல்வியினை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் முகமாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் நான்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கபட்டுள்ளன. இவை வட்டு இந்து வாலிபர் சங்க போசகரும், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அதிபருமான திரு. ந.சபாரட்ணசிங்கி மற்றும் சமூக ஆர்வலர் திரு. ந.சபாநாதன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை வட்டு இந்து வாலிபர் சங்க கனடாக் கிளை வழங்கியிருந்தது. ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more

பொறுப்புக் கூறலை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்-

hugo swireஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் பொறிமுறையை விரைந்து செயற்படுத்த வேண்டுமென பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அடுத்து வரும் வாரங்களில் இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போர் பல பேரழிவுகளின் பின்பு கடந்த 2009 ஆண்டு நிறைவுக்கு வந்தது. இப் போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக ஊடகங்களில் பல ஆவணங்கள் வெளியாகின. இதில் பாலியல் வண்புணர்வு, காணாமற்போதல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் என்பன மிகக் கொடூரமானவைகள். இதில் தெளிவாக இருக்கவேண்டும். இரு தரப்புகளும் கொடுமைகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையின் இறுதிப் போரில் போர் மரபுகள் பின்பற்றப்படவில்லை. பழைய காயங்களுக்கு வலி இருக்க முடியும் என்பது எமது சொந்த அனுபவத்தின் மூலம் தெரியும். ஆனால் அவர்களின் வலிகள் இன்னும் மோசமாக உள்ளன என்பதை எமது அனுபவம் காட்டுகிறது.
Read more