தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினது அனுசரணையுடன் வவுனியாவில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!! (படங்கள் இணைப்பு)

IMG_1849வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 14 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய தமிழ் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் (தரம் – 11) பெறுபேறுகளை முன்னேற்றும் முகமாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இம் மாத காலப்பகுதிகளில் இலவச கல்விக் கருத்தரங்கை கணித, விஞ்ஞான பாடங்களில் நடாத்துகின்றனர். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு கடந்த சில தினங்களாக வவுனியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, மொனராகலை, கண்டி, மாத்தளை ஆகிய 14 மாவட்டங்களில் 180 இற்கும் அதிகமான பாடசாலைகளை உள்ளடக்கி 88 மையங்களில் சுமார் 10,000 சாதாரண தர மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கை நடாத்துகின்றனர். இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகமும் அனுசரணை வழங்குகின்றது. வடக்கு கிழக்கில் தமிழர்களின் கல்வி, கலை, கலாசார, விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டில் கடந்த 02 வருடங்களுக்கு மேல் முக்கிய பங்காற்றி வரும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் (11.10.2015) ஞாயிற்றுக்கிழமை பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சார்பாக கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், கழகத்தின் பொருளாளர் த.நிகேதன் மற்றும் கழகத்தின் உறுப்பினர் த.பிரியதர்சன் ஆகியோரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ் வழிகாட்டல் கருத்தரங்கு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்களினால்” தொடர்ந்து 06வது வருடமாக கல்விச் சமூகத்தின் வரவேற்புடன் நடைபெறுகின்றது.

IMG_1849 IMG_1835 IMG_1842 IMG_1844 IMG_1847 IMG_1849 IMG_1855 IMG_1857 IMG_1858 IMG_1879 IMG_1881