Header image alt text

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஒத்திவைப்பு-

janathipathi anaikuluபாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நாளைகாலை 9.00மணிவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆணைக்குழுவின் அமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த ஆட்சேபனைகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஆட்சேபனைகள் குறித்து தீர்மானிக்கும் வரை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் தொழிலை இல்லாதொழிப்பதற்கான நடைபவனி-

56455454545இலங்கையிலிருந்து சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இன்றுகாலை ஆரம்பமானது. வணிகர் கழக கட்டிடத்தில் நிறைவடைந்த நடைபவனியைத் தொடர்ந்து சத்தியப் பிரமாண நிகழ்வும் ஒன்றுகூடல் வைபவமும் யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல் எனும் செயற்றிட்டம் இவ்வருடம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் செல்வி எஸ். தனுசியா தெரிவித்தார்

தனுன திலஹரத்ன விடுதலை-

thanunaஹைகோப் வழக்குகளில் இருந்து தனுன திலஹரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகளது முன்னாள் கணவரான இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்தபோது நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறி சரத் பொன்சேகா மற்றும் தனுனவுக்கு எதிராக ஹைகோப் நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து 2012 மார்ச் மாதம் 15ஆம் திகதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் எவன்காட் விசாரணை-

evangardகடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் காலி துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் தெரிவுக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்-

courtsஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் நியமனங்களை இரத்துச் செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாகானந்த கொடிதுவக்கு என்பவர் சட்டத்தரணி மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் தீர்மானம் சட்ட விரோதமானது என, தீர்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம்-

ranilஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்றுபகல் 12.10க்கு அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அந்நாட்டு முக்கியஸ்தர்களுடன் பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்-

jailஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அமைச்சரை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

sangari

மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன,

ஜனாதிபதி,

கொழும்பு.

அன்புடையீர்,

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் பரிதாப நிலை

சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நாட்டில் பல்வேறு சிறைகளில் இருக்கும் 250 இற்கும் மேற்பட்ட கைதிகள் சம்பந்தமாக சில உண்மைகளை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். இப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரின் உடல்நிலை போன்ற பல பல்வேறு காரணங்களால் இம் முயற்சியில் வெற்றியடையாது போகலாம். ஆனால் நிச்சயமாக பெரும் பகுதியினர் தங்களுடைய இலக்கை அடைந்தே தீருவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் சார்பில் தங்களுடன் பேச்சு நடாத்த எனக்கு தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் நானொரு மனித நேயம் கொண்ட 82 வயதை பூர்த்தியாகிய மூத்த பிரஜை, 50 ஆண்டுகால முதுமை பெற்ற சட்டத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் சட்டத்தரணியான 17 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் 20 ஆண்டுகள் கிடைத்திருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சிலரின் திட்டமிட்ட சதியால் இழந்து எதுவித குற்றமும் புரியாத இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் தங்களுடன் கலந்துரையாட இத் தகுதிகள் போதுமானதென கருதுகின்றேன்.
Read more