Header image alt text

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள்-

Captureதமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினால் சுகவீனமுற்ற 20 கைதிகள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார். குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தைத் தமக்குப் பெற்றுத்தருமாறு இவர்கள் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 5 நாட்களை எட்டியுள்ளது. தமிழ் கைதிகளின் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் யாழ்ப்பாணம் முனீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பமானது. தமிழ் அரசியல் கட்சிகள், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

ஊர்ப் பாடசாலைகளை வளர்த்தெடுக்க பெற்றோரும் முயற்சிக்க வேண்டும்-பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)

amaikottai american mission (4)யாழ். ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விசேட கல்வி அலகுத் திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பும், பாடசாலையின் அதிபர் திரு. பி.சிறீதரன் அவர்களின் தலைமையில் நேற்று (15.10.2015) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பேரின்பநாயகம் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சிவானந்தராஜா மற்றும் பங்குத்தந்தை வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆசியுரையினை வழங்கினார். தொடர்ந்து பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்காக அவர்களைத் தூர இடங்களுக்குக் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செய்வது உள்ளுர் பாடசாலைகளின் முக்கியத்துவத்தை தடுக்கின்றது. Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்-(படங்கள் இணைப்பு)

12092566_10203837670376938_187772220_nபிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியா நகர சபை மைதானத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன்,, டொக்டர் சிவமோகன் வட மாகாண சபை சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. ஜி.ரி லிங்கநாதன், திரு. தியாகராஜா, திரு. நடராஜா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் திரு. க.சந்திரகுலசிங்கம், பிரஜைகள் குழுவின் தலைவர், கிராம சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

அலம்பில் சென்ற் அன்ரனீஸ் சனசமூக நிலையத் திறப்பு விழா-(படங்கள் இணைப்பு) 

photo 3 (1)முல்லைத்தீவு அலம்பில் சென்ற் அன்ரனீஸ்  சனசமூக நிலையத் திறப்பு விழா நேற்று (15.10.2015) வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. மேற்படி சனசமூக நிலையத்தின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியானது மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டிடத்தினை மாகாணசபை உறுப்பினர்கள் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். மேற்படி நிகழ்விலே பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. அன்ரனி ஜெகநாதன், அலம்பில் பகுதி பங்குத்தந்தை, உள்ளுராட்சி உதவி ஆணையாளர், அலம்பில் பாடசாலையின் அதிபர் ஆகியோரும், சென்ற் அந்தனிஸ் சனசமூக நிலையத்தின் தலைவர், அதன் செயலாளர் மற்றும் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கட்டிடம் திறப்பு-(படங்கள் இணைப்பு)

chunnakam rc school kitchenயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது அவரது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சமையலறை கட்டிடத்திற்காக ஒருதொகைப் பணம் கொடுக்கப்பட்டிருந்தது. குறித்த சமையலறைக் கட்டிடம் நேற்றையதினம் (15.10.2015) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு முதல்முதலாக குறித்த சமையலறையில் இப்பாடசாலைப் பிள்ளைகளுக்கான உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பாடசாலையின் அதிபர் யாமினி சதீஸ் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.
Read more

தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_8745யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகீரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீரதன் அவர்கள் இந்த பகீரங்க அழைப்பை விடுத்துள்ளார், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தினை மேம்படுத்திடவும் அங்கவீனமாளவர்களின் வாழ்வினில் ஒளியேற்றிடவும் என வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக வட்டுவாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் நடாத்தி வருகின்றோம்.
Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர் விசாரணை-

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுமுற்பகல் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். நேற்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகி இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். இன்றும் அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இதேவேளை மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்களை நிராகரித்த நிலையிலேயே ஆணைக்குழு, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றது.

சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதை தடுப்பது குறித்த கலந்துரையாடல்-

charlesசிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செலயக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை, சிறுவர் தொழில் அற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ பிரகடனத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வாசித்தார். மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஜே.திருச்செல்வம், கிழக்கு மாகாண பிரதி தொழில் ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான கே.எல்.கபீர், அம்பாறை மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் ரி.லக்ஷ்மிதரன், பிரதேச செயலாளர்கள், சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்களை தொழில்களில் அமர்த்துதல், அதற்கெதிரான நடவடிக்கைகள், சிறுவர் தொழிலைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெலிகட சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கொழும்பு வெலிகட சிறைச்சாலைக்கு முன்னால் சத்தியாக்கிரகமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான தேசிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பல அமைப்புகள் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளன. அரசியல் கைதிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை சத்தியாக்கிரகம் தொடருமென அதன் ஏற்பாட்டாளர் சுந்தரம் மஹேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் ஆர்ப்பாட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பெண் மீட்பு, ஒன்பதுபேர் கைது-

school vanயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட குடும்பப் பெண், நேற்றுக்காலை புத்தூர் பகுதியிலுள்ள சட்டதரணி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு காரணமான அவரது கணவர் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை இரகசிய பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்று வரும் தாபரிப்பு வழக்கு நடவடிக்கைக்கு தாயாருடன் சென்று விட்டு திரும்பிய இ.ஜானகி (வயது 32) என்ற குடும்பப் பெண்ணை வெள்ளை வானில் வந்த கும்பல், கம்பர்மலை பகுதியில் வைத்து புதன்கிழமை (14) கடத்திச் சென்றிருந்தது. சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார், வல்வெட்டித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலமையிலான இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. Read more