சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கட்டிடம் திறப்பு-(படங்கள் இணைப்பு)
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது அவரது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சமையலறை கட்டிடத்திற்காக ஒருதொகைப் பணம் கொடுக்கப்பட்டிருந்தது. குறித்த சமையலறைக் கட்டிடம் நேற்றையதினம் (15.10.2015) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு முதல்முதலாக குறித்த சமையலறையில் இப்பாடசாலைப் பிள்ளைகளுக்கான உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பாடசாலையின் அதிபர் யாமினி சதீஸ் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.