தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_8745யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகீரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீரதன் அவர்கள் இந்த பகீரங்க அழைப்பை விடுத்துள்ளார், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தினை மேம்படுத்திடவும் அங்கவீனமாளவர்களின் வாழ்வினில் ஒளியேற்றிடவும் என வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக வட்டுவாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் நடாத்தி வருகின்றோம்.

பாதிக்கபட்ட மக்களின் வாழ்வினை மேம்படுத்திட தமிழ் அரசியல் பிரமுகர்கள் தமக்குள் இருக்கின்ற கட்சி சார்பான பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எங்கள் உறவுகளின் வாழ்வு மேம்படவும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற எங்கள் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் சிறந்திடவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களின் அவயவங்களை இழந்து தாய் தந்தையரை இழந்து கணவன்மாரை இழந்து தங்களின் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு தமது எதிர்காலம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கின்ற மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடமையினை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள அனைத்து தமிழ் அரசியல் பிரமுகர்களும் முன்வரவேண்டும் என பகீரங்கமாக அழைப்பு விடுத்தார்.

தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு ஆண்டுதோறும் அரசால் அபிவிருத்திக்காக வழங்கபடுகின்ற பன்முகபடுத்தப்பட்ட நிதியில் இருந்து பெரும் பகுதியை மாவட்ட பேதம் இன்றி ஜக்கிய நாடுகள் சபையால் இலங்கையிலே யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கணிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்க்கு தம்மாலான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட விழப்புலன் அற்ற உறவுகளுக்கென வட்டு இந்து வாலிhர் சங்கத்தினால் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதியான 100 வெள்ளைப் பிரம்புகள், 200 குடைகள் என்பனவற்றோடு மதியபோசனமும் வழங்கப்பட்டது.

IMG_8745IMG_8762