Header image alt text

சுன்னாகத்தில் வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம்-(படங்கள் இணைப்பு)

IMG_2902யாழ். சுன்னாகம் பகுதியில் இன்று (17.10.2015) சனிக்கிழமை வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வுப் ஊர்வலமொன்று நடைபெற்றது. சுன்னாகம் வலிதெற்கு கூட்டுறவுச் சங்க தலைமைக் கட்டிடத்திற்கு முன்பாக ஆரம்பமான மேற்படி வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை ஒழுங்கையில் அமைந்துள்ள வாழ்வகத்திற்கு (கண்புலனற்ற சிறார்கள் இல்லம்) சென்றடைந்ததைத் தொடர்ந்து வாழ்வகத்தின் இயக்குநர் திரு. ரவீந்திரன் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு சம்பந்தமான கூட்டமொன்றும் நடைபெற்றது. சுன்னாகம் லயன்ஸ் கழகமும், வாழ்வகமும் (கண்புலனற்ற சிறார்கள் இல்லம்) இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் மற்றும் லயன் டேவ பீற்றர் (பிராந்திய இணைப்பாளர்) ஆகியோரும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

வட்டுக்கோட்டை கார்த்திகேயா வித்தியாலய 120ஆவது ஆண்டு பரிசளிப்பும், நிறுவனர் நினைவுநாளும்-(படங்கள் இணைப்பு)

IMG_2862 (2)யாழ். வட்டுக்கோட்டை கார்த்திகேயா வித்தியாலயத்தின் 120ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவுநாளும் நேற்று (16.10.2015) வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் அதிபர் ந.சிவசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். முhவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நோபேட் உதயகுமார் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், சங்கானை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஜெகதீஸ்வரி அருள்மயம் (உதவிக் கல்விப் பணிப்பாளர், அழகியல், வலிகாமம் கல்வி வலயம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும், சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வாணிவிழா-(படங்கள் இணைப்பு)

IMG_2895யாழ். சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும், சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வாணிவிழா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. க.கஜேந்திரன் அவர்களது தலைமையில் இன்று (17.10.2015) சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் மற்றும் சு.துரைசிங்கம் (முன்னாள் அதிபர், மயிலணை வித்தியாசாலை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சர்வேஸ்வரக் குருக்கள் (பிரதமகுரு, சுன்னாகம், கதிரமலை சிவன் கோவில்), பிரம்மஸ்ரீ உமாசுதக் குருக்கள் (சுன்னாகம், மயிலணை கந்தசுவாமி கோவில்) ஆகியோர் ஆசியுரையினை வழங்கினார்கள். தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அம்பாள் விளையாட்டுக் கழக இளைஞர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி ஜெயராஜ் அவர்கள் மேற்படி பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்தார். Read more

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

welikada jailபொதுமன்னிப்பு அளித்து தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வழங்கியுள்ள உத்தரவாத்தினைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளைப் பார்வையிட்டதுடன், ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பில் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உறுமொழியை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ள அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் உறுதிக்கு அமைவாக நவம்பர் 7ஆம் திகதி முடிவு கிடைக்கவில்லையாயின் அன்று தொடக்கம் மீண்டும் தமது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமைய நவம்பர் 7ஆம் திகதி அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின், அவர்களுடன் இணைந்து தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். Read more

யாழில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு-

elumpukooduயாழ்ப்பாணம் அரியாலை முள்ளி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அருகில் பெண்களில் ஆடைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் நேற்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் எலும்புக்கூடு மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பை, பென்சில், குடை மற்றும் இரு விதமான செருப்பு, ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்றுமாலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். போர்ச்சூழலில் இப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   மேலும் செய்திகளை வாசிக்க…. Read more