சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும், சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வாணிவிழா-(படங்கள் இணைப்பு)
யாழ். சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும், சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வாணிவிழா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. க.கஜேந்திரன் அவர்களது தலைமையில் இன்று (17.10.2015) சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் மற்றும் சு.துரைசிங்கம் (முன்னாள் அதிபர், மயிலணை வித்தியாசாலை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சர்வேஸ்வரக் குருக்கள் (பிரதமகுரு, சுன்னாகம், கதிரமலை சிவன் கோவில்), பிரம்மஸ்ரீ உமாசுதக் குருக்கள் (சுன்னாகம், மயிலணை கந்தசுவாமி கோவில்) ஆகியோர் ஆசியுரையினை வழங்கினார்கள். தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அம்பாள் விளையாட்டுக் கழக இளைஞர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி ஜெயராஜ் அவர்கள் மேற்படி பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்தார்.