யாழில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு-
யாழ்ப்பாணம் அரியாலை முள்ளி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அருகில் பெண்களில் ஆடைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் நேற்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் எலும்புக்கூடு மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பை, பென்சில், குடை மற்றும் இரு விதமான செருப்பு, ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்றுமாலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். போர்ச்சூழலில் இப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை வாசிக்க….
அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பிரஜை மாயம்-
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜா என்பவரை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்த நபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு செல்லவில்லையெனவும் அவரது மகள் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார், புதர்த் தேடுதல் மந்நும் கடற்கரைப்பகுதித் தேடுதல் நடவடிக்டைக என்பவற்றை மேற்கொண் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியை கடத்திய கணவன் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்-
யாழ். வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் தனது மனைவியை ஆட்களை வைத்து கடத்திய கணவன் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா, எதிர்வரும் 28ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார். கடந்த புதன்கிழமை (14) பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு தாபரிப்பு வழக்குக்காக சென்றுவிட்டு தாயாருடன் திரும்பி பெண்ணை அவரது கணவன் கூலியாட்களை வைத்து வான் ஒன்றில் கம்பர் மலை பகுதியில் வைத்து கடத்தியிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வல்வெட்டிதுறை பொலிஸார் புத்தூர் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, வியாழக்கிழமை (15) மீட்டிருந்தனர். அத்துடன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவன் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், வான் ஒன்றினையும் மீட்டிருந்தனர். குறித்த நபர்களை, நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (16) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.