தர்மத்தின் நிழலாய் வாழ்ந்த ஈழத்தின் கருமவீரன்
– இந்திரன் –
விடிவுக்காக தியாகம் புரிந்தவர்களை எடையிடும்போது உயிர்நீத்த மாவீரர்களையே அளவுகோலாக கொள்வது வழமை. வார்த்தையில் சொல்லிவிட முடியாத அளப்பெரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட தமிழ் இளைஞர்களின் போராட்டத்தின் ஆரம்பகாலம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல் உலக அரங்கிலேயே புரட்சிக்கான இலக்கணங்களை வகுத்தது. அவ்வாறான தகுதியை மிதவாத அரசியல் சிந்தனை கொண்ட தேசப்பற்றாளர்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ தமிழ்மக்கள் அவ்வளவு இலகுவில் வழங்க விரும்பியதில்லை. என்னதான் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் என்று தேசத்துக்காக உயிரையே மாய்த்தாலும் மிதவாதிகளின் கொள்கைகள் எனப்படுவது அவர்களுக்கு சேரவேண்டிய பெருமைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்துவந்தமை தமிழரசியல் பரப்பில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.
இந்த பாரம்பரிய மரபை உடைத்தெறிந்த கர்ம வீரர்களில் முக்கியமானவர்தான் டேவிட் ஐயா.
அவரது வாழ்வும் இயக்கமும் மரணமும் இன்று புராணங்கள் போல நினைவுகூரப்பட்டாலும் தமிழ்மக்களின் விடிவு என்ற விடயத்தில் அவர் கொண்ட கொள்கையும் அதற்காக அவர் வகுத்த விடுதலைப் பாதையும் இன்றும்கூட பின்பற்றக்கூடியதாக நம் முன் விரிந்து கிடப்பதுதான் ஆச்சரியம். டேவிட் ஐயாவை இலங்கையில் காந்திய அமைப்பை தோற்றுவித்த கர்த்தாவாக உருவகிப்பதன் மூலம் அவரை அஹிம்சையின் வடிவம் கொண்டவராக உருவகித்துக் கொள்வதில் பலர் முனைப்படையலாம். அவரை ஈழத்து காந்தி என்று அழையாத குறையாக அவரது கொள்கைகளை அமைதியின் உச்சமாக பதிவு செய்ய முயலலாம். Read more