உபாலி கொடிகார கைதாகி பிணையில் விடுவிப்பு-

upaliபொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் உறுப்பினர் உபாலி கொடிகார கைதுசெய்யப்பட்டார். அண்மையில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றிருந்த வேளை உபாலி கொடிகாரவும் அங்கு சென்றார். இதன்போது பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்ட வேளை, அவர்களின் கடமைகளுக்கு உபாலி கொடிகார இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்படி வாக்குமூலத்தை பதிவுசெய்ய வருமாறு அவருக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உபாலி கொடிகார குருந்துவத்தை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவரை கைதுசெய்த நிலையில் இவரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எக்னலிகொட வழக்கின் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரதானி-

prageeth ekneligodaகாணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பெயரிட மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்யா எக்னலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் பிரதிவாதிகளை இம்மாதம் 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சேயா படுகொலை விடயமாக, கொண்டையா விடுதலை-

kondaiyaவன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை, விடுதலை செய்யுமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி சேயாவின் கொலைக்கும் கொண்டயாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் இதேவேளை, கொண்டையாவின் சகோதரனான சமன் ஜயதிலக்கவை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்-

Captureயாழ். வட்டுககோட்டை யர்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 27.10.2015 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணியளவில் யாழ்பாண்க் கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் அறியத்தந்துள்ளார். குறித்த இவ் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழைய மாணவர் அமைப்புக்களில் பழமை வாய்ந்த ஒன்று என்பதோடு 1879ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.